முன்னாள் முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்
சனி, 18 மார்ச் 2023 (21:21 IST)
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், தற்போது நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் இணைந்து, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
மும்பையில் முகாமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று, இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியை மைதானத்தில் நேரில் கண்டுகளித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது.
இந்த நிலையில், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் உத்தவ்தாக்கரேவை மும்பையில் உள மாட்டோஸ்ரீ இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.