2018 டிசம்பர் 28ஆம் தேதி பேட்ட படத்தின் முன்னோட்டம் முதலில் வெளியானது. பேட்ட டிரைலரில் ரஜினி பேசிய சில வசனங்கள் மாஸாக இருந்தாலும் அஜித்தையும் விஸ்வாசத்தையும் தாக்குவதுப் போல அமைந்தது. ரஜினி பேசிய ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, சென்டிமென்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல்லாம வுட மாட்டேன் ( விஸ்வாசம் குடும்ப செண்ட்டிமெண்ட் படம்)…’ போன்ற வசனங்கள் அஜித்தைத் தாக்குவதாக நினைத்து வருந்தினர் அஜித் ரசிகர்கள்.. அதற்கேற்றார் போல ரஜினி ரசிகர்களும் சில விஜய் ரசிகர்களும் இந்த வசனங்களை முன்னிறுத்தி டிரைலரைப் பரப்பினர். இதனால் அஜித் ரசிகர்கள் கோபத்தோரு விஸ்வாசம் டிரைலருக்காக காத்திருந்தனர்.
அதையடுத்து 3 நாள் இடைவெளியில் விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. விஸ்வாசம் படத்தின் மாஸான டிரைலர் பேட்ட டிரைலரால் உண்டான அவப்பெயருக்குப் பதில் சொல்லும் விதமாக அமைந்தது. இதனால் அஜித் ரசிகர்களைக் கையில் பிடிக்கமுடியாத சூழல் உருவானது. டிரைலரில் அஜித் பேசிய வசனங்களான ‘பேரு தூக்கு துரை. ஊரு கொடுவிலார் பட்டி. பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா…. உங்கள பாத்தா கொல வெறி வரணும். ஆனா, எனக்கு உங்கள பிடிச்சிருக்கே (ரஜினியை சொல்வது போல)..’ பேட்ட க்கு சரியானப் பதிலாக அமைந்தது… இதனை முன்னிறுத்தி வேகமாக விஸ்வாசம் டிரைலரை வேகமாகப் பரப்பி டிரண்ட்டிங்கில் நம்பர் 1 ஆக்கினர். இதனால் சமூக வலைதளங்கள் முழுவதும் ரஜினியைக் கேலி செய்யும் வீடியோக்கள் உலாவர ஆரம்பித்தன. ஒப்பீட்டளவில் பேட்ட டிரைலரை விட விஸ்வாசம் டிரைலர் அதிகளவில் பார்வையாளர்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. அனால் பேட்ட அளவுக்கு விஸ்வாசம் படத்திற்கு புரோமோஷன்கள் எதுவும் பண்ணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைலர் பார்வையாளர்கள் விஷயம், ரஜினி கேலி செய்யப்படும் விதம் ஆகியவற்றைப் பார்த்து மனமுடைந்த பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது நெருங்கிய நண்பர்களிடம் ‘என் படத்தால் ரஜினி சாருக்கு இப்படிக் கேலியும் அவமானமும் உண்டாகிவிட்டதே’ மனமுடைந்து கூறிப் புலம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.