தளபதி 67 படத்தில் இணைகிறாரா ஹாலிவுட் நடிகை?

புதன், 7 செப்டம்பர் 2022 (19:27 IST)
விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்தில் ஏற்கனவே சமந்தா, த்ரிஷா, மற்றும் கீர்த்தி சுரேஷ்  ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த காட்சிகளில் ஹாலிவுட் நடிகை விஜய்யுடன் இணைந்து நடித்தார் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த படம் குறித்த ஒவ்வொரு தகவலும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருவதால் இந்த படம் தமிழ் திரையுலகில் சாதனை செய்யும் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்