நாயகன், வில்லன் அடுத்து இயக்குனர்

செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (16:45 IST)
ரோஜாவில் நாயகனாக அறிமுகமான அரவிந்த்சாமி புகழின் உச்சியில் இருக்கும் போதே, சினிமாவுக்கு டாட்டா  காட்டினார்.


 


அதன் பிறகு சமீபத்தில் தனி ஒருவன் படத்தில் வில்லனாக திரும்பி வந்தார். தற்போது இந்தியில், டியர் டாட், தமிழில் போகன் என்று இரு படங்களில் நடித்து வருகிறார். டியர் டாட் முடிந்து விரைவில் திரைக்கு வருகிறது.
 
அரவிந்த்சாமியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? வில்லன் அல்லது நாயகன்?
 
இரண்டும் இல்லை. படம் இயக்குவதுதான் அரவிந்த்சாமியின் அடுத்த இலக்காம். ஏற்கனவே இரண்டு கதைகள் எழுதி வைத்திருக்கிறாராம். அதில் ஒன்றை முதலில் இயக்க உள்ளாராம்.
 
உங்க நடிப்பு மாதிரியே இயக்கமும் இருக்குமா?
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்