தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 2000 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு திடீரென குறைய ஆரம்பித்தது. இதே போல அவரது பாடல்கள் பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டும், அவரின் சம்பளம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.
தமிழில் இப்போது அவரிடம் துருவ நட்சத்திரம், மற்றும் லெஜண்ட் ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இந்நிலையில் இப்போது அவர் தனது ரி எண்ட்ரியை ஆரம்பித்துள்ளார். இந்த முறை இரண்டு ஆல்பம் பாடல்களுக்கு முன்னணி தயாரிப்பாளர்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 96 பட தயாரிப்பாளர் நந்தகுமார் மற்றும் மகா படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் ஆகிய இருவரும் இந்த இரு பாடல்களையும் தயாரிக்க உள்ளனர்.