தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 2000 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு திடீரென குறைய ஆரம்பித்தது.