ஹரிஷ் கல்யாணின் மார்க்கெட்டை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் ‘டீசல்’… இத்தனை கோடியா?

vinoth

வெள்ளி, 21 ஜூன் 2024 (11:41 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து அவர் நடிப்பில் லப்பர் பந்து, ஆயிரம் கோடி வானவில் மற்றும் டீசல் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இதில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டீசல் படத்தின் ஷூட்டிங் 100 நாட்களுக்கு மேல் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்தது. அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்ததால் இந்த படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாம். இதுவரை இந்த படத்தை எடுக்க 20 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இது ஹரிஷ் கல்யாணின் மார்க்கெட்டை விட பல மடங்கு அதிக தொகை என்றும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்