அவர் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஓர் அடையாளம் இருக்கும். நீங்கள் ஒரு பாட்டைக் கேட்டவுடன், இது ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா... அதுதான் எனது வெற்றி. அதுதான் எனது தனித்துவ அடையாளம்.
எத்தனைப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் என்று நான் என்றும் எண்ணிப் பார்த்ததில்லை. ஆண்டுக்கு மூன்று படங்களுக்கு மேல் நான் இசையமைப்பதில்லை. நான் கார்த்தியைச் சந்தித்த போதெல்லாம், எனது இசையில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று சொல்வார். அது அமையாமலேயே இருந்தது. இப்போது ‘தேவ்’ அதற்கான தளத்தை அமைத்தது.
கார்த்தி நிறைய முரட்டுத்தனமான கதைகளில் நடித்திருக்கிறார். அதனாலேயே எனது இசையில் உள்ள படத்தில் நடித்தால், தான் இன்னும் மிடுக்காகத் தெரிவேன் என்று சொல்வார். எங்களை இணைத்த ‘தேவ்’ படத்துக்கு நன்றி. இவ்வாறு கூறினார்.