கார்த்தியின் தேவ் பட ஆடியோ வெளியானது!

சனி, 29 டிசம்பர் 2018 (19:19 IST)
நடிகர் கார்த்தி இயக்குநர் பாண்டிராஜின் 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்துக்குப் பிறகு, தற்போது தேவ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 


 
இவர்களுடன் 'நவரச நாயகன்' கார்த்திக் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் தேவ் படத்தில் நடித்து வருகிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லட்சுமண் இதனை தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில், தற்போது படத்தில்  இடம் பெற்றுள்ள 5 பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
 
1.) டேய் மச்சான் தேவ்,
2.) அவள் என்னுடைய பெண், 
3.) ஒரு நூறு முறை, 
4.) ஆணங்கே சிணுங்கலாமா, 
5.) எங்கடா நீ போன 
 
 
ஆகிய 5 பாடல்களும் இடம்பெற்றுள்ள லிரிக் வீடியோ தொகுப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஹரீஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல் .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்