அஜித்துக்கு சொன்ன கதையில் இப்போ தனுஷ்.. ஹெச் வினோத் கொடுத்த அப்டேட்!

சனி, 7 ஜனவரி 2023 (15:16 IST)
ஹெச் வினோத் துணிவு படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாக அவர் யோகி பாபு நடிப்பில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கமல்ஹாசன் மற்றும் தனுஷ் ஆகியோருக்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளார். இதில் எந்த படத்தை முதலில் தொடங்குவார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் தனுஷ் படம் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் சதுரங்கவேட்டை படத்தின் பிரம்மாண்டமான வெர்ஷன் ஒன்றை தான் அஜித் சாருக்கு சொன்னேன். ஆனால் அது சில காரணங்களால் நடக்கவில்லை. இப்போது அந்த கதையைதான் தனுஷ் சாருக்கு சொல்லியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்