தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் கடந்த 11 ஆம் தேதி வெளியான படம் துணிவு.
இந்த நிலையில், அஜித்தின் துணிவு படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள நிலையில், பொங்கலுக்கு ரிலீஸான இப்படம் '' தி ரியல் வின்னர்'' என்று நடிகை மஞ்சுவாரியர், இயக்குனர் ஹெச்,வினோத், போனிகபூர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் துணிவு பட புதியபோஸ்டரை வெளியிட்டுள்ளனர்.