விஜய் படத்தில் முக்கியக் கதாபாத்திரம்… ஹெச் வினோத் பட்டியலில் லெஜண்ட் நடிகர்கள்!

vinoth

புதன், 24 ஜூலை 2024 (16:30 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் விஜய் அளவுக்கு மாஸான ஒரு நடிகர் நடித்தால் சரியாக வரும் என ஹெச் வினோத் ஆலோசித்து வருகிறாராம். அந்த பட்டியலில் மோகன் லால் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரெல்லாம் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அது குறித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்