கமல்ஹாசனின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்: இன்று மாலை அறிவிப்பு!

ஞாயிறு, 6 நவம்பர் 2022 (12:58 IST)
நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
நாளை கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாட இருப்பதால் இன்று மாலை 6 மணிக்கு அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது
 
இந்த படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களை இயக்கிய  எச் வினோத் அடுத்ததாக கமல் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை  எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் ஒரு கருத்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் இன்று மாலை இதுகுறித்த அறிவிப்பு வெளியானவுடன் உண்மை தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்