சூர்யா படத்தின் இசையமைப்பாளர் யார்னு தெரியுமா?

வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:50 IST)
சூர்யாவின் அடுத்த படத்துக்கு இசையமைக்க இருப்பது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது.

 
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் அம்பாசமுத்திரம் போல செட் போடப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். இந்தத் தகவலை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்