ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு டப்பிங் கிடையாதாம்…

புதன், 4 ஏப்ரல் 2018 (13:59 IST)
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’ படத்துக்கு டப்பிங் கிடையாது என்கிறார்கள். 
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ‘சர்வம் தாள மயம்’. இந்தப் படம் முழுக்க லைவ் சிங்க் சவுண்ட் என்று சொல்லக்கூடிய நேரடி ஒலிப்பதிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியாக டப்பிங் செய்யத் தேவையில்லை.
 
இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷ் – அபர்ணா பாலமுரளி சம்பந்தப்பட்டக் காட்சிகள் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்குமாம். கடைசியாக மேகாலயாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இத்துடன், மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாம்.
 
பாண்டிராஜ் தயாரிப்பில், வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத்  திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்