வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவரின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று சிறந்த இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்த இவர் ஹீரோவாக நடித்திருந்த வாட்ச்மேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தன் தோழியும் நீண்டநாள் காதலியுமான பின்னணி பாடகியான சைந்தவியை திருமணம் செய்த ஜிவி பிரகாஷிற்கு ஒரு தங்கை இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், இவருக்கு பவானி ஸ்ரீ என்ற அழகான தங்கை இருக்கிறார். தற்போது அவர் விஜய் சேதுபதி நடித்துவரும் "சங்கத்தமிழின்" படத்தில் நடித்து வருகிறார்.