அசுரன் அப்டேட்: தனுஷ் - வெற்றிமாறன் காம்போவில் இணையும் ஜிவி பிரகாஷ்

வியாழன், 27 டிசம்பர் 2018 (19:31 IST)
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் வெளியாகிய நிலையில் மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் இணையும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்துள்ளது.
 
அசுரன் என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும், இந்த படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமானது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். 
 
இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன் தனுஷ் நடித்த ஆடுகளம், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்