முதல் நாளே ஜி.வி.யுடன் சேர்ந்து காதல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. இதனால் முதல் முறையாக சேர்ந்து நடிப்பதை நினைத்து பயமாக இருந்தது. அப்போது டைரக்டரிடம் சீன் கேட்டுவிட்டு என்னை நோக்கி வந்த ஜி.வி. பிரகாஷ் எனக்கு கைகொடுத்துவிட்டு, இந்த காட்சியில் இந்த மாதிரி நடிப்போம் என்றார். சிறிது நேரத்தில் நீண்டகாலமாக பழகிய நண்பர் போலவே பேசிப்பழகினார்.