நரகாசுரன் படத்தை விட்டு வெளியேற தயார் - கௌதம் மேனன் விளக்கம்

வியாழன், 29 மார்ச் 2018 (12:00 IST)
நரகாசுரன் படத்திலிருந்து நான் வெளியேற வேண்டும் என நரேன் கார்த்திக் நரேன் விரும்பினால் அதற்கு தயார் என இயக்குனர் கௌதம்மேனன் கூறியுள்ளார்.

 
தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக தடம் பதித்த கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார். 
 
அந்நிலையில், கார்த்திக் நரேன் தனது டிவிட்டர் பக்கதில் "பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன்.  ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்யவேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும்  இப்படி ஏமாற்றாதீர்கள்" என ஒரு பதிவை இட்டிருந்தார்.
 
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கௌதம்மேனன் “ கார்த்திக் நரேனின் டிவிட் என்னை அப்செட் ஆனது. எனவே, பதிலுக்கு நானும் டிவிட் போட்டேன். அதற்காக நரேனிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு நான் முழு சுதந்திரமும் கொடுத்தேன். அவர் கேட்ட நடிகைகளை நடிக்க வைத்தோம்.  நரகாசுரன் படத்தில் 50 சதவீத லாபத்தை நான் கேட்கவில்லை. அப்படத்தில் என் பங்கு இல்லை. படத்தை விட்டு நான் வெளியேற வேண்டும் என அவர் விரும்பினால் நான் மகிழ்ச்சி அடைவேன். சிலரின் பேச்சைக்கேட்டு நரேன் கோபமடைந்துள்ளார். படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும். அதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். படம் விரைவில் ரிலீஸ் ஆகும்” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்