நாடகத்தைக் கைவிட்ட நடிகை

திங்கள், 3 ஜூலை 2017 (15:23 IST)
படங்களில் பிஸியாக நடிப்பதால், நாடகத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்துள்ளார் ஷ்ரதா ஸ்ரீநாத்.


 

 
'காற்று வெளியிடை', 'இவன் தந்திரன்' போன்ற படங்களில் நடித்துள்ள ஷ்ரதா ஸ்ரீநாத், நாடகத்துறைக்கு முழுக்கு போட்டுள்ளார். கன்னடாவில் 'யூ டர்ன்' என்ற படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகின் கவனத்தைப் பெற்றவர் ஷ்ரதா ஸ்ரீநாத். தமிழில், மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிவரும் 'இவன் தந்திரன்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அடிப்படையில், ஷ்ரதா ஸ்ரீநாத் ஒரு நாடக கலைஞர். நடிக்க வந்தபின் இவருக்கு தொடர்ச்சியாக குவிந்து வரும் வாய்ப்புகள் காரணமாக, நாடகத்துறைக்கு முழுக்கு போடுவதாகக் கூறியுள்ளார் ஷ்ரதா. இப்பவும் தன் நாடக நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகப் புலம்பும் ஷ்ரதா, "நான் சினிமாவுக்கு வர உதவியதே நாடகத்தில் பெற்ற பயிற்சிதான். அதை எப்போதும் மறக்க மாட்டேன்" என்கிறார். தமிழில், அடுத்ததாக இவருக்கு விஜய் சேதுபதி - மாதவன் கூட்டணியில் 'விக்ரம் வேதா', நிவின் பாலி நடிக்கும் 'ரிச்சி' படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.


 

வெப்துனியாவைப் படிக்கவும்