கடவுளுக்குதான் தெரியும்... கடுப்படித்த விஷால்

திங்கள், 9 மே 2016 (16:26 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கிய படம், மத கஜ ராஜா. இந்தப் படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டும்.


 


படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது.
 
மத கஜ ராஜா இதே வெளியாகிறது என்று ஒரு டஜன் ரிலீஸ் தேதிகள் அறிவித்துவிட்டனர். ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்த மாதிரி படம் தள்ளிப் போகும். மே 13 படம் கண்டிப்பாக வெளிவரும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில், அன்றும் படம் வெளிவரப்போவதில்லை, ஜுன் 10 -ஆம் தேதியே படம் வெளியாகும் என இப்போது அறிவித்துள்ளனர்.
 
இது குறித்து விஷாலிடம் கேட்டதற்கு, மத கஜ ராஜா எப்போது வெளியாகும் என்று அந்த கடவுளுக்குத்தான் தெரியும் என்று கடுப்படித்துள்ளார்.
 
விஷால் நடித்துள்ள மருது திரைப்படம் மே 20 வெளியாகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்