கோட் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை இவ்வளவு கோடியா?... லாபம் எடுக்க எவ்வளவு வசூல் செய்யவேண்டும்?

vinoth

செவ்வாய், 9 ஜூலை 2024 (08:08 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதே போல படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றியுள்ளார். அவர் இந்த உரிமையை 88 கோடி ரூபாய் கொடுத்து மினிமம் கியாரண்டி முறையில் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த தொகையை அவர் மீண்டும் எடுக்கவேண்டுமென்றால் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக திரையரங்குகள் மூலமாக வசூலிக்க வேண்டுமாம். லியோ படத்தின் வசூலைக் கணக்கில் கொண்டு கோட் இந்த தொகையை வசூலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்