இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் படத்துக்கு ஏழுகடல் ஏழு மலை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். யுவன் இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இதில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நிவின் பாலியுடன் சூரி ரயிலில் செல்லும்போது, நிவின் பாலி, உனது வயது என்ன கேள்வி கேட்கிறார். இதற்கு சூரி தனக்கு 32 என்று கூறவே, தனக்கு வயது 8822 என்று கூறுகிறார்.