கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

செவ்வாய், 12 டிசம்பர் 2017 (12:52 IST)
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஹர ஹர மகாதேவகி படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கஜினிகாந்த் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா  சைகல் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
இந்நிலையில் நேற்று நடிகர் ஆர்யாவின் பிறந்த நாள். இன்று ரஜினியின் பிறந்த நாள். இதனையொட்டி நேற்று இரவு 11.59 மணிக்கு கஜினிகாந்த் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினி நடித்த  தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி தோன்றுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்