என்னை வில்லியாக சித்தரித்து விட்டார்கள் - காயத்ரி ரகுராம் டிவிட்

புதன், 23 ஆகஸ்ட் 2017 (18:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களில் சிலரை நல்லவர்களாகவும், சிலரை கெட்டவர்களாகவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன என நடிகை காயத்ரி ரகுராம் ரீ டிவிட் செய்துள்ளார்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை எந்த அளவுக்கு பலருக்கு பிடித்ததோ, அதே அளவுக்கு காயத்ரியை பிடிக்காமல் போனது. காரணம், காயத்ரி நடந்து கொண்ட விதம், அவர் பேசும் ஸ்டைல், ஒருவரை கார்னர் செய்வது, ஒருவருக்கு எதிராக செயல்படுவது என அவரின் பல செய்கைகள் பலருக்கும் அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தியது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களை தங்களின் சுயலாபத்திற்காக தொலைக்காட்சி நிறுவனம் எப்படி சித்தரிக்கின்றன என ஒருவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதை காயத்ரி ரீடிவிட் செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:


 

 
இருட்டு இல்லையேல் வெளிச்சம் வெளியே தெரியாது. வில்லன் இல்லாமல் யாரும் ஹீரோ கிடையாது. காயத்ரி இல்லாமல் ஓவியா இல்லை. ஊடகங்கள் மற்ற ஊடகங்களோடு போட்டி போட்டு வெற்றி பெற பசியோடும் பேராசையோடும் அலைகிறது. தற்போது வில்லன் இல்லை. ஓவியாவை முன்னிறுத்துவதற்காக மற்றவர்களின் நற்பெயர்களை, பண்புகளை அவர்கள் அழித்துவிட்டார்கள். அதோடு அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரையும் கெடுத்து விட்டார்கள். ரசிகர்களிடையே வெறுப்பு மற்றும் கண்ணீரை வரவழைப்பதற்கு பதில், ஊடகங்கள் மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும். 
 
உண்மைய காட்டி நல்லவற்றை உருவாக்க வேண்டுமே தவிர, அதை மறைத்து அழிவை உருவாக்கக்கூடாது. காயத்ரி ரகுராம் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அதேபோல் ஓவியாவோடு சேர்த்து பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவர் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது. மக்களை ஏமாற்றியே ஊடகங்கள் ஹீரோக்களையும், வில்லன்களையும் உருவாக்க முடியாது. ஒரு  நாள் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த டிவிட்டைத்தான் காயத்ரி ரீ டிவிட் செய்துள்ளார். மேலும், அதை ஓவியா ஆர்மி, ரசிகர்கள், பிக்பாஸ், விஜய் டிவி, கமல்ஹாசன் என அனைவருக்கும் அவர் டேக் செய்துள்ளார். 
 
அதாவது இந்த கருத்துகளை தன்னுடைய கருத்தாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்