கவுதம் மேனனில் மிஸ்டர். எக்ஸ் இவர் தானோ?

வெள்ளி, 5 மே 2017 (16:36 IST)
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. 


 
 
இப்படத்தில் இருந்து மறுவார்த்தை பேசாதே, நான் பிழைப்பேனோ என இரு பாடல்களை வெளியிட்டுள்ளார் கவுதம் மேனன். ஆனால், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்.
 
எனினும் படத்திற்கு தர்புகி சிவா அல்லது லியோன் ஜேம்ஸ் தான் இசையமைத்திருப்பார்கள் என்று தகவல்கள் வருகின்றன. 
 
இப்படத்தை காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறார். படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்