நடிக்க வந்துவிட்டார் கங்குலி மகள்!

வியாழன், 25 மே 2017 (07:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான கேப்டன் யார் என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வரும் பெயர் சாட்சாத் கங்குலிதான். மைதானத்தில் இவரது செயல்பாடுகள் அணிக்கு வெற்றியை தேடித்தரவேண்டும் என்ற வெறியோடு இருக்கும்



 


இந்நிலையில் கங்குலியும் அவரது மகளும் இணணந்து ஒரு விளம்பரத்தில் நடிக்கின்றனர். நகைக்கடை விளம்பரம் ஒன்றில் மகளுக்கு நகை கிப்ட் கொடுக்கும் தந்தை கேரக்டர்களில் கங்குலியும் அவரது மகள் சனாவும் நடிக்கின்றனர்.

இதற்காக சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோசெஷனின் புகைப்படங்களை கங்குலி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சனாவுக்கு சினிமாவுக்கு உரிய முகவெட்டு இருப்பதால் அவருக்கு பாலிவுட் திரையுலகில் இருந்து அழைப்ப்பு வருகிறதாம். அனேகமாக பாலிவுட் திரையுலகை சனா கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்