கேம் சேஞ்சர் பட 'ஜாபிலம்மா' பாடல் லீக்! படக்குழு அப்செட்

சனி, 16 செப்டம்பர் 2023 (20:30 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ராம்சரண். இவர் நடிப்பில் சமீபத்தில்  படம் RRR திரைப்படம். இப்படம்  உலக அளவில் வசூல் குவித்தது.

இந்த நிலையில்,  ராம்சரணின் அடுத்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டுள்ள  இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் பாடல்களுக்காக மட்டுமே சுமார் 90 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, படத்தின் பட்ஜெட் திட்டமிடப்பட்டதைவிட அதிகமாகியுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் தமன் இசையில், இடம்பெற்ற 'ஜாபிலம்மா' என்ற பாடல் ரிலீஸாகும் முன்பே சமூகவலைதளத்தில் லீக்காகியுள்ளது.

இப்பாடம் மட்டும் ரூ.15 கோடியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இப்பாடல் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்து, இதுபற்றி  போலீஸீல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதை சமூகவலைதளங்களில் இருந்து நீக்கும் பணியில்,  படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்