‘ஹே மின்னலே’… அமரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

vinoth

புதன், 25 செப்டம்பர் 2024 (11:24 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை பொறுத்துவது போன்ற நிலவியலில் இப்போது இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது. தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் தனிப்பாடல் பற்றி அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்.  ஹே மின்னலே என்ற அந்த பாடல் ஒரு காதல் பாடலாக இருக்கும் என்றும் இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்