ஜீ.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய இயக்குனர் ராம்பாலா
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (11:08 IST)
தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது அந்தப் படத்திலிருந்து அவர் விலகியுள்ளார்.
சென்ற வருடம் வந்த பேய் படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த படம், தில்லுக்கு துட்டு. காமெடியில் பின்னி பெடலெடுத்த இந்தப் படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவித்தார். உடன் வடிவேலும் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் படத்திலிருந்து ராம்பாலா விலகியுள்ளார். வேறெnருவரை இயக்குனராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தயாரிப்பு தரப்பு. ராம்பாலாவின் விலகலுக்கான காரணம் தெரியவில்லை.