விமலுக்கு அடித்த யோகம்

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (10:50 IST)
‘மன்னர் வகையறா’வைத் தொடர்ந்து பல படங்கள் விமல் கைவசம் வந்திருக்கின்றன.
விமல் சொந்தமாகத் தயாரித்து, நடித்த படம் ‘மன்னர் வகையறா’. படம் ரிலீஸாகி 3 வாரங்கள் ஆனாலும், தமிழகம் முழுக்க இன்னும் பல தியேட்டர்களில் இந்தப் படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அடுத்ததாக விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ படம் தயாராக இருக்கிறது. மார்ச் மாதம் இந்தப்  படம் ரிலீஸாக இருக்கிறது.
 
அடுத்து, சற்குணம் தயாரிப்பில் விமல், ஓவியா நடிக்கும் ‘கே 2’ படம் தயாராகி வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்னும் 5 புதிய படங்களில்  கமிட்டாகியுள்ளார் விமல்.
 
‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய் உள்பட 5 இயக்குநர்களின் படங்களில் நடிக்க  கமிட்டாகியுள்ளார் விமல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்