விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (14:08 IST)
சமீபத்தில் எந்த நடிகையும் கீர்த்தி சுரேஷ் அளவுக்கு சரசரவென புகழின் உச்சியை அடைந்ததில்லை. 


 
 
முதல் படம், இது என்ன மாயம் வெளியாகும் முன்பே பாம்பு சட்டை, ரஜினி முருகன் உள்பட நான்கு படங்களில் கமிட்டானவர் தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 
விரைவில் தொடங்கவிருக்கும் முத்தையா இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிப்பதால் இனி சின்ன நடிகர்களுடன் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்