முதல்முறையாக மூன்று வேடங்களில் சந்தானம்!

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (19:09 IST)
கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருந்த நடிகர் சந்தானம் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் 'ஏ1' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் 'ஓடி ஓடி உழைக்கணும்', 'டகால்டி', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் 
 
இந்த நிலையில் சந்தானம் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஸ்வாசம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்று மிகப்பெரிய லாபம் பெற்ற கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேடத்தில் சந்தானம் நடித்தாலே காமெடி சரவெடியில் இருக்கும் என்ற நிலையில் மூன்று வேடத்தில் நடிக்கும்போது காமெடி உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த படத்தின் டைட்டில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டிலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருப்பதாகவும், அந்த ஆச்சரியம் என்ன என்பதை அறிய வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை காத்திருக்கவும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது 

#TripleActionSanthanam - Fun pannalam vaanga! We will be revealing the Title on 5th Sept!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்