முதலில் மக்கள் பிறகுதான் அரசியல் - அரவிந்த்சாமி காட்டம்

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:40 IST)
தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் அசாதாரண நிலை குறித்து கமலும், அரவிந்த்சாமியும் தொடர்ந்து கருத்துகள் கூறி வந்தனர்.  இருவருமே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பெரும்பான்மை மக்களின் மனநிலையை பிரதிபலித்தனர்.

 
இப்படி கருத்து கூறுவதால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று அரவிந்த்சாமியிடம் ஒரு ரசிகர் கூறியதற்கு, சட்டப்படியே  கருத்து கூறுகிறேன். 46 வயதாகிறது, இப்போதாவது பேசியாக வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இன்று காலை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஊழல் குற்றவாளிகள் - அக்யூஸ்ட் - என நீதிபதிகள்  தீர்ப்பளித்துள்ளனர். 4 வருட சிறைத்தண்டனை இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரவிந்த்சாமி மீண்டும்  ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.
 
"எம்.எல்.ஏக்களை மீண்டும் நம் சமூகத்துக்கு வந்து வேலை செய்யச் சொல்லுங்கள். கொண்டாட இரு தரப்புக்கும் எதுவுமில்லை. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், அது சொல்லும் விஷயமும் என்ன என்று நினைவில் கொள்ளுங்கள். நமது காபந்து முதல்வர் இன்று அலுவலகம் சென்று மற்ற எம்.எல்.ஏக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என விரும்புகிறேன். முதலில்  மக்கள், பிறகுதான் அரசியல்" என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்