இந்த ஆண்டின் முதல் ஹிட் படம் இதுதானாம்...

புதன், 21 பிப்ரவரி 2018 (18:19 IST)
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கலகலப்பு 2. இப்படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் மிர்ச்சி சிவா, வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். 
 
ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாகம் வெளியாவது தற்போது தமிழ் சினிமாவில் ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது. அந்த வகையில் கலகலப்பு திரைப்படம் வெற்றி பெற அதன் இரண்டாம் பாகமாக கலகலப்பு 2 வெளியாகியது.
 
இந்நிலையில் கலகலப்பு 2 தான் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முதல் ஹிட் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே தற்போது வரை ரூ.19 கோடி வசூல் செய்துவிட்டதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்