பட உதவி இயக்குநராக மாறிய நயன்தாரா!

திங்கள், 24 ஏப்ரல் 2017 (15:09 IST)
சற்குணம் தயாரிப்பில் உருவாகி வரும் 'அறம்' திரைப்படம், நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை மையமாக கொண்டுள்ளதாகவும், இதில் நயன்தாரா தன்னம்பிக்கை மற்றும் தைரியம் படைத்த மாவட்ட ஆட்சியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இப்படத்தின் படப்பிடிப்புகள் பரமக்குடி அருகேயுள்ள அப்பனூர் பகுதியில் நடைபெற்றது. இது குறித்து பட இயக்குனர் கோபி  கூறுகையில், 'அறம்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய நயன்தாரா, தனது காட்சியில் நடித்து முடித்துவிட்டு கேராவேனுக்குள் செல்லாமல். மானிட்டரில் நடிப்பை பார்த்துவிட்டு, பொறுமையாக காத்திருந்து அடுத்த காட்சியில் நடிப்பார்  என்றார்.
 
ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'அறம்' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்