திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக செய்திகள் வெளியான நிலையில், கடந்த 10 நாட்களாக பூஜை செய்து வரும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், ஒருவரின் நம்பிக்கையை அறிவிக்கும் நடைமுறை திருமலையில் , இந்துக்கள் அல்லாதவர்கள் படிவத்தில் கையெழுத்திட்ட பின்னரே வைகுண்ட வரிசை வளாகத்தில் அனுமதிக்கப்படுவர். இதன்படி பவன் கல்யாண் மூன்றாவது மனைவி ஹிந்து அல்ல என்பதால், அவரது மகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.