ஐபிஎல் தொகுப்பாளினியுடன் உல்லாசமாக இருந்த பிரபல நடிகர்! வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்!

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (12:10 IST)
ஐபிஎல் தொகுப்பாளினியுடன் உல்லாசமாக இருந்த பிரபல நடிகர்! வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்! 
 
தற்போது ஐபிஎல் தொடர் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் தொடர் என்றாலே அதில் வரும் தொகுப்பாளர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் ஐ.பி.எல் தொகுப்பாளினி ஷிபானி தண்டேகரும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் தான். 
 
பாடகி, நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளினி  என பன்முகம் கொண்ட இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.  அதனை தொடர்ந்து இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
 
அப்போது தான் ஷிபானி பிரபல இந்தி நடிகர் ஃபர்ஹான் அக்தரை காதலித்து வருவதாக  கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதனை கடந்த 2011ஆம் ஆண்டு உறுதி செய்தார் ஷிபானி தண்டேகர். பிறகு இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வந்ததையடுத்து  கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து வருவதாகவும் சில செய்திகள் பரவி வந்தது. 
 

 
எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி கடந்த சில காலமாகவே தனது காதலருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில்  தற்போது ஷிபானியும் ,  ஃபர்ஹான் அக்தரும் கடற்கரையில் கட்டி பிடித்து விளையாடும் புகைப்படங்களை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷிபானி. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்