பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை...

வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:04 IST)
சின்னத்திரை நடிகை செளஜான்யா பட வாய்ப்புகள் இல்லை என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சின்னத்திரை நடிகை செளஜான்யா. இவர் பெங்களூரில் உள்ள கும்பல்கோட்டில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென்று தனது அறையில் ஆர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடிகை செளஜான்யாவின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவரது கடிதம் ஒன்றை போல்ஸார் கைப்பற்றியுள்ளனர். அதில்,  தான் மனதில் பாதிக்கப்பட்டுள்ள்தாகவும் தனது மரணத்திற்கு யாரையும் குற்றம்சாட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்