தன்னை விட 16 வயது குறைந்த இளைஞனை கரம் பிடிக்கும் பிரபல நடிகை!
திங்கள், 10 டிசம்பர் 2018 (16:01 IST)
24 வருடங்களுக்கு முன் அதாவது 1994-ஆம் ஆண்டு 'பிரபஞ்ச அழகி' பட்டத்தை வென்றவர் சுஷ்மிதா சென். இவர் தமிழில் பிரவீன்காந்த் இயக்கத்தில் நாகார்ஜூனா ஜோடியாக 'ரட்சகன்' திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பிறகு இந்தி திரையுலகில் பரபரப்பானவர், முதல்வன் படத்தில் ‘ஷக்கலக்க பேபி... ஷக்கலக்க பேபி... லுக்குவிட தோணலையா’ என்ற பாடலுக்கு நடனம்
ஆடினார்.
43 வயதாகும் அவர் திருமணம் செய்துக் கொள்ளாமல், 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களாக பாலிவுட் பிரபலம் ரோஹ்மேன் ஷாவல் என்பவருடன் சுஷ்மிதா சென் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
தற்போது இந்த ஜோடி இல்லற வாழ்வில் இணைய முடிவு செய்துள்ளனர். தனது குழந்தைகளுக்கும் ரோஹ்மேனை பிடித்துவிட்ட காரணத்தால் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் சுஷ்.
இதில் 43 வயதான சுஷ்மிதா 27 வயது ரோஹ்மேனை அதாவது தன்னை விட 16 வயது குறைந்தவரை கரம் பிடிக்க இருப்பது, பாலிவுட் வட்டாரத்தில் தலைப்பு செய்தியாகியிருக்கிறது.
முன்னதாக முன்னாள் உலக அழகி பிரியங்க சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த நிக் ஜோனஸை மணந்தது குறிப்பிடத்தக்கது.