தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகை.... புகைப்படம் வைரல்
வியாழன், 10 டிசம்பர் 2020 (21:32 IST)
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் அக்ஷய்குமார். இவரது நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் லட்சுமி. இப்படத்தைப் பலரும் வரவேற்றனர். வசூல் ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த நாயகியாக நடித்தவர் கியாரா அத்வானி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்த்தேன். குடும்பத்துடன் படம் பார்த்ததால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
இவர் தனது குடும்பத்தினருடன் தியேட்டரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.