பிரபல நடிகையின் மார்ஃபிங் வீடியோ....சைபர் கிரைம் போலீஸில் புகார்

வியாழன், 3 ஜூன் 2021 (19:25 IST)
மலையாள சினிமா நடிகை ஒருவரின் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்  போலீஸில் புகாரளித்துள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகை ரம்யா சுரேஷ். இவரைப் போன்ற ஒரு பெண்ணின் வீடியோவைப் பகிர்ந்து இணையதத்தில் பேசியுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், அப்பெண் தன்னைப் போல் இருக்கிறார். என்னை நன்கு அறிந்தவர்கள் அது நானில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். இதுகுறித்து, தான் ஆழப்புழாவில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான தருணத்தின் தன் கணவர் மற்றும் குடும்பத்தினர் தனக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறியுள்ளார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் ஆதரவு  கூறிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்