ஷூட்டிங்கின்போது காயமடைந்த பிரபல நடிகர் !

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:34 IST)
நடிகர் அருண் விஜய் படப்பிடிப்பின்போது காயமடைந்தார். இதுகுறித்து அவரே தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடந்துவருகிறது.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமார் அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும். இவர்கள் இருவரும் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக

பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 

இந்நிலையில், AV33 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படப்பிடிப்பின்போது,நடிகர் அருண்விஜய் காயமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்,  இக்காயத்திற்காக ஒரு மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், இந்தக் காயம் காரணமாக தனது அன்றாட உடற்பயிற்சியை இனி  5 நாட்களுக்கு செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்