சமீபத்தில் திரையுலகில் 43 ஆண்டுகளை நிறைவு செய்தார் நடிகை ராதிகா. இதையொட்டி திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போதும் கூட அவர் பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் அருண் விஜய் படம் என படப்பிடிப்புகளில் கலந்துகொண்ட அவர் இப்போது சூர்யா நடிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.