புஷ்பா 2 ஷூட்டிங்கில் பஹத் பாசில்…. படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:00 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.

இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பில் பஹத் பாசில் இணைந்துள்ளார். இயக்குனர் சுகுமாரோடு அவர் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் வில்லனாக வந்து பஹத் பாசில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்