குடும்ப வன்முறையில் கணவருக்கு எதிரான ஆதாரங்கள்...முன்னணி நடிகை தாக்கல்
வியாழன், 18 மார்ச் 2021 (23:02 IST)
கணவரின் குடும்ப வன்முறைக்கு எதிராக ஹலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
ஹாலிவுட் சினிமாவில் நட்சத்திரத் தம்பதிகளாக இருந்தவர்கள் பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி. இவர்கள் தத்தெடுத்த குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இப்பொழுது தனித்தனியே வாழ்ந்துவருகின்றானர். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றாத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தனது கணவரின் குடும்ப வன்முறைக்கு எதிராக ஹலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் பிராட்பிட்டை வருத்தம் தெரிவிக்கும்படி செய்வதற்காக ஏஞ்சலி ஜூலி இப்படிச் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.