தனது ஆரம்பகாலம் பற்றி பேசியுள்ள அவர் நான் எல்லோரிடமும் கற்றுக்கொண்டேன். குறிப்பாக தோனியிடம் இருந்து. நான் அணிக்குள் சென்ற போது அவர் என்னிடம் எப்படி பந்துவீச வேண்டும் என்பது பற்றி எதுவுமே சொல்லவில்லை. அப்போது அது எனக்கு ஆச்சரயமாக இருந்தது. ஆனால் பின்னர் நான் என்னுடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் செய்தது என்று தெரிந்துகொண்டேன் எனக் கூறியுள்ளார்.