அஸ்வின் மீது கடுப்பில் என்ன சொல்ல போகிறாய் குழு! அங்கயும் ஆட்டிட்யூட்!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:26 IST)
என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆன குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் தன் வாயால் கெட்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாவதாக இருந்தது. அந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் செய்து பேசியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அதனால் படத்தின் மீது ஏற்பட்ட நெகட்டிவ் வைப்ரேஷனால் படத்தின் ரிலீஸையே தயாரிப்பாளர் தள்ளிவைத்தார்.

அதையடுத்து பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸாகி அட்டர் ப்ளாப் ஆனது. இதற்குக் காரணம் அஸ்வினின் பேச்சுதான் என்று படக்குழு செம்ம காண்டில் இருக்கிறதாம். தான் பேசியது தவறு என்று பேசி அவரை வீடியோ வெளியிட சொல்லி உள்ளார்கள். ஆனால் அஸ்வின் அதற்கு மறுத்து அவர்களிடமும் தனது ஆட்டிட்யூட்டைக் காட்டியுள்ளாராம். இதனால் இப்போது இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினரே அவர் மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்