அதன் பின் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இப்போது எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களின் தலைப்புகளின் உரிமை இதுவரை எந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்படவில்லை என உரிமைக்காப்பு கோரியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் படத்துக்கு எங்க வீட்டு பிள்ளை டைட்டில் வைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.