சுந்தர் சியின் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியீடு!

வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:44 IST)
நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சியின் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது 
 
சுந்தர் சி நடிப்பில் திருஞானம் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’ஒன் 2 ஒன்’ என்ற திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் நாயகியாக ராகினி திவேதி என்பவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சுந்தர் சி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் என்ற படத்தின் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வி.இசட் துரை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சுந்தர்சி ஏற்கனவே 2 திரை படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு திரைப்படத்தின் அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்